அறிவு
காரைதீவு நேரு சன சமூக நிலையத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி கடந்த புதன்கிழமை மாலை நேரு சன சமூக நிலையத்தின் தலைவர் மு. ரமணீதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து சிறுவர் பூங்கா சம்பிரதாயபூர்வமாக சிறுவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இப்பூங்காவை நிர்மாணித்து உதவிய நிலையத்தின் போசகரும், தொழிலதிபருமான இ. திருநாவுக்கரசு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். விழாவில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு அவரால் இனிப்புக்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து நேரு சன சமூக நிலையத்தின் உறுப்பினர்களுக்கு நிலையத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட ரி. சேர்ட்டுகள் நிலைய முன்றலில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.



Post A Comment:
0 comments so far,add yours