( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது பிரதேசத்தின் முன்னணி விளையாட்டு கழகங்களுள் ஒன்றான ஸஹிரியன் விளையாட்டு கழகத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான முதலாவது அழைப்பு சினேகபூர்வ மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிறிக்கட் போட்டியில் அட்டாளைச்சேனை பைனா விளையாட்டு கழகத்தை 8 விக்கட்டுகளினால் வெற்றி கொண்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் இடம்பெற்ற 17 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை பைனா விளையாட்டு கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி 17 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றனர். அட்டாளைச்சேனை பைனா விளையாட்டு கழகத்தின் சார்பில் முஹம்மது சஜாத் 50 ஓட்டங்களையும் , எம்.சபீத் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டு கழகத்தினர் 15 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தனர்.

சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டு கழகத்தின் சார்பில் அணித்தலைவர் எம்.ஏ.றஸ்மி 4 ஓவர்களில் 23 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்று அணியின்  வெற்றிக்கு வழியமைத்தார்.
அணியின் வீரர் முஹம்மது காலிதீன் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்று அணித்தலைவருடன் இணைப்பாட்டமாக 110 ஓட்டங்களைப் பெற்றனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக அணித்தலைவர் எம்.ஏ.றஸ்மி தெரிவு செய்யப்பட்டார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours