(கிலசன்)

வறுமையிலும் கல்வியில் சாதித்து உயிரியல் விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதல் நிலை மாணவியாக மருத்துவபீடத்திற்கு தெரிவான திருகோணமலை சாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற மூதுரை சேர்ந்த முஷாதிகா எனும் மாணவியின் வீடு தேடிச் சென்று வறுமையிலும் சாதித்த அம்மாணவியின் வெற்றியை பாராட்டி அவரது மருத்துவ கல்விக்கான சிறு தொகை பணத்தை  மதிக்குமார் சமூக நற்பணி மன்றத்தால் நேற்று 08ம் திகதி  வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு திருகோணமலை தி/மூ/துவாரகா வித்தியாலயத்தின் அதிபர்,ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இசை பயிலும் மாணவர்களின் நீண்ட கால குறைபாடாக காணப்பட்ட  சுருதிப்பெட்டி  மற்றும் கற்றல் உபகரணங்களையும் இவ் அமைப்பின் தலைவர் மதிக்குமார் மற்றும் செயவாளர் முகுந்தன் ஆகியோர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours