நீர் வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான இணைப்பு செயலாளராக அரசியல், சமூக, பொதுநல செயற்பாட்டாளரான டேவிட் நவரட்ணராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவருக்கான நியமன கடிதத்தை கொழும்பில் உள்ள அமைச்சு காரியாலயத்தில் வைத்து இராஜாங்க அமைச்சர் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.
இப்பதவி மூலமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேவை உடைய மக்களுக்கான நீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பார் என்று டேவிட் நவரட்ணராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours