(எம்.எம்.ஜபீர்)
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு பாடசாலை தளபாடம் மற்றும் போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எம்.எம்.பாறூக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.ஜலீல், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றசீம் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எம்.எம்.எம்.அன்சார், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Post A Comment:
0 comments so far,add yours