துறையூர் தாஸன்.
வரிப்பத்தான்சேனை அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, வரிப்பத்தான்சேனை லீடர் ஜுனியர் பாடசாலை ஆரம்ப கல்வி கற்றல் வள நிலையத்தில் அண்மையில் (08) இடம்பெற்றது.
அதிபர் யூ.கே.நிஹால் தலைமையிலான இந்நிகழ்வில், ஓய்வுநிலை அதிபரும் முன்னாள் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருமான தேசமானி எஸ்.உதுமாலெவ்வை, ஓய்வு நிலை அதிபர் ஏ.எல். எம் சஹீட், தொழிநுட்ப உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான ஆர்.எம்.பாயிஸ் ,ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எஸ் ஹாமிதுலெப்பை ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு வறுமை நிலைக்குட்பட்ட ஆரம்ப பிரிவு மாணவர்கள் 50 பேருக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours