காரைதீவு நிருபர் சகா
த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட தலைமையகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் முன்னிலையில் ஒப்பமிட்டனர்.
இதன்போது; காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் கட்சியின் இளைஞரணி துணைச்செயலாளர் சட்டத்தரணி அ.நிதாஞ்சன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியகட்சி முக்கியஸ்தர்களும் சமுகமளித்திருந்தனர்.
இ.த.அரசுக்கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபைத்தவிசாளருமான த.கலையரசன் கல்முனையின் பிரபல சமுகசேவையாளரும் மாணவர்மீட்புப்பேரவை தலைவருமான எந்திரி க.கணேஸ் திருக்கோவிலின் நீண்டகால த.அ.கட்சி செயற்பாட்டாளர் வைத்தியர் த.அருள்நேசன் தம்பிலுவில் இளம்ஊடகவியலாளர் இரா.சயனொளிபவான்(சயன்) பொத்துவில் நீண்டகால த.அ.கட்சி செயற்பாட்டாளர் கே.சுந்தரலிங்கம் காரைதீவு பிரதேசசபை த.அ.கட்சி பெண் உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர்.
ரெலோ சார்பில் பாண்டிருப்பு த.பிரதீபன் அக்கரைப்பற்று எஸ்.ரவிகரன் திருக்கோவில் கே.பரணிதரன் ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர்.
வேட்புமனுப்பத்திரம் (18) புதன்கிழமை சுபநேரத்தில் அம்பாறைக்கச்சேரியில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது என கட்சிமுக்கியஸ்தர் கே.ஜெயசிறில் தலைமையகத்திலிருந்து தெரிவித்தார்.



Post A Comment:
0 comments so far,add yours