காரைதீவு  நிருபர் சகா


கொரோனா அச்சம் காரணமாக அம்பாறை மாவட்ட  பிரதேசசெயலகங்கள் அனைத்தும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டசேவைகளை வழங்கும்.
அதுவரை மக்கள் பிரதேசசெயலகம் வருவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

அதுதொடர்பானஅறிவுறுத்தல்  பதாதைகள் செயலகமுன்றலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொங்கவிடப்பட்டுள்ளது.
கிராமத்தினுள் புதியவர்கள் சந்தேகத்திற்கிடமானவர்கள்நடமாடினால் உடனடியாக அறிவிக்கவேண்டும் என கிராமசேவை உத்தியோகத்தர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளது.

 புதன்கிழமை காரைதீவு பிரதேசசசெயலாளர் சிவ.ஜெகராஜன் அலுவலகம் நுழையமுன்பு செயலகமுன்றலில் அமைத்த கைகழுவும் இடத்தில் கைகழுவிவிட்டு கிராமசேவையாளர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதேவேளை  காரைதீவு கடற்கரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய வெளிநாட்டு வெள்ளைக்காரரொருவர் பற்றியதகவல் கிடைத்ததும் காரைதீவு கடற்படையினரிடன்பிரதேசசெயலாளர் அறிவித்ததும் அவர்கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours