மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல்கள் திணைக்களத்தின் ஊடாக கடந்த 17ஆம் திகதி முதல் வேட்புமனுக்கள் கையேற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்றைய தினம் காலை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, பசீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன உட்பட 19 கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்வதற்காக 352 பேர் போட்டியிடுகின்றனர். அத்துடன் இரண்டு பிக்குகள் தலைமையிலும் சுயேட்சைக் குழுக்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours