இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றையதினம் தொற்
றுக்குள்ளான ஆறு பேர் உறுதி செய்யப்பட்டனர்.
இதேவேளை, COVID 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பில் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
பொதுமக்கள் அச்சமடையாது சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடும் பட்சத்தில், தொற்றுக்குள்ளாவதிலிருந்து தப்ப முடியும் என அவர் கூறினார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours