இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தற்போது 50ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நிலையத்தில் நடைபெறும் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 43 பேர் என நேற்றைய தினம் இரவு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே தற்போது 50ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 3 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours