குமணன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்றத் தேர்தலில் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை (18) பகல் போட்டியிடுகிறது.
ஏப்ரல் 25 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென இன்றைய தினம் புதன்கிழமை (18) பகல் அம்பாரை மாவட்ட செயலகத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் மேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவராஜா கலையரசன், ஆ.தமிழ் நேசன், ஆர்.சயனொளிபவன், சின்னையா ஜெயராணி, செல்வராஜா கணேசானந்தம், எஸ்.சுந்தரலிங்கம், தாமோதரம் பிரதீபன், முருகுப்பிள்ளை ரவிகரன், எம்.பரணிதரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours