( றம்ஸீன் முஹம்மட்)
கல்முனை மாநகரசபையில் எதுவிதமான அனுமதியும் பெறாமல் தாம் விரும்பியவாறு பழைய கட்டிடங்களை இடித்து மாளிகா வீதியை ஆக்கிரமித்தவாறு கட்டிட நிர்மாண பணிகள் மிகவும் அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விடயமாக கல்முனை மாநகரசபை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் எவரும் இதுவரை சம்பந்தப்பட்ட இடத்துக்கு வருகை தராமையினால் பிரதேச மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

இந்த சட்டவிரோத கட்டிட நிர்மாணத்திற்கு கல்முனை மாநகரசபையும் ஒத்துழைப்பு வழங்குவதாகவே பிரதேச மக்கள் கருதுகின்றனர்.
வீதிகளிலுள்ள மின்கம்பங்களும் , தொலைபேசி கம்பங்களும் இல்லையென்றால் இந்த நிலமை இன்னும் மோசமடையலாம். சிலர் இந்த கம்பங்களைக்கூட தமது வீட்டுச் சுவர்களில் வைத்து கட்டிடங்களை நிர்மாணித்துள்ளனர்.
கட்டிட நிர்மாணப் பொருட்களும் கட்டிட இடிபாடுகளும் பல மாதங்களாகியும் வீதியோரங்களில் குவிந்து போக்குரத்திற்கு பெருத்த இடஞ்சலையும் வீதி விபத்துக்களையும் ஏற்படுத்தி வருகின்றது.
வீட்டுக்கு படிகட்டி படிக்கு சுவர் கட்டி இரண்டு வாகனங்கள் பயணம் செய்யக்கூடிய வீதிகள் ஒரு வாகனம் கூட பயணிக்க முடியாத நிலைக்கு மாறி வருகின்றது. இதில் வடிகான்களும் வீட்டுக்கள்ளாகி விட்டன.இது மக்களின் திறமையா கல்முனை மாநகரசபையின் இயலாமையா என மக்கள் கேட்கின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours