காரைதீவு  நிருபர் சகா

அம்பாரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையிலான விசேட அவசர கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை மாலை (16) மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்கள் வி.ஜெகதீசன், எ.ல்.சட்டத்தரணி அப்துல் லத்தீப், அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ,பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள் ,திணைக்களத் தலைவர்கள் , பொலிஸ் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அரசாங்க அதிபர் கொரோனா சம்பந்தமாக பல்வேறு விடயங்கள் குறித்து அரசாங்க அதிபர் விளக்கமளித்ததுடன் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்க அதிபர் பொலிஸ் மற்றும் முப்படையினர் அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப்பணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்கலாக செயற்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அத்துடன், அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.ரி.ஏ.பிரசங்க சேரசிங்க கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பில் விளக்கமளித்தா


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours