மட்டக்களப்பில் டெங்கின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் தொடர்ந்து அந்நிலையைப் பேணுவதற்காக தாக்கம் காணப்பட்ட பகுதிகளில் சுற்றாடல் துப்பரவுப் பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினரால் நேற்று (15) முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுவேப்பங்கேணி மற்றும் இருதயபுரம் பகுதிகளில் உள்ள பிரதான வெள்ள நீர் வடிந்து செல்லும் பிரதான வடிகானில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டதோடு மண் அகழ்வதற்கான கனரக வாகனத்தைப் பயன்படுத்தி அதனுள் வளர்ந்திருந்த ஆத்துவாழைஇ பன் உள்ளிட்ட ஏனைய தாவரங்களும் அகற்றப்பட்டன.
அத்தோடு வடிகானினுள் காணப்பட்ட பிளாஸ்டிக் கொள்கலன்கள்இ உக்காத கழிவுகள் மரங்கள் என்பன அகற்றப்பட்டு மாநகரசபையின் சுகாதார ஊழியர்கள் மற்றும் கறுவேப்பங்கேணி கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தனர்களால் முகாமைத்துவம் செய்யப்பட்டு அகற்றப்பட்டன.
வடிகான்களை மறித்து வேலிகள் மற்றும் கொங்கிறீட் அணைகளை இட்டு வெள்ள நீரை வழிந்தோட விடாமல் தடுத்து பொது மக்களின் வதிவிடங்களினுள் செல்லும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக குறித்த தடுப்புக்களை அகற்றுவதற்கான அறிவித்தல் விடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி கே.கிரிசுதன். சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் இருதயபுரம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜேசுரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post A Comment:
0 comments so far,add yours