துதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பிரதேசங்களின் பொது அமைப்புகளினால் தொற்று நீக்கி விசிறும் செயற்பாடுகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

பிரதேசத்தின் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடன் வந்தாறுமூலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வந்தாறுமூலை சந்தை, பஸ்தரிப்பிடங்கள், ஆலயங்கள், மாவடிவேம்பு வைத்தியசாலை உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களுக்கு தொற்று நீக்கி விசிறப்பட்டது.

அதேவேளை இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் களுவாஞ்சிக்குடி, செங்கலடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் உள்ள பொது இடங்களுக்கும் தொற்று நீக்கி விசுறும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours