கொரோணா வைரஸினால் நாடு பூராகவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் அன்றாடம் தொழில் புரிந்து வாழ்வாதாரம் ஈட்டும் குடும்பங்களுக்கான உதவி வழங்கும் செயற்திட்டம் ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.

ஜனநாயகப் பேராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் அவர்களின் வழிகாட்டலில் அக்கட்சியின் வாகரைப் பிரதேசப் பொறுப்பாளர் சதீஸ் அவர்களினால் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இவ்வாறு அரிசி வழங்கி வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் ஊடரங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் வீடுவீடாகச் சென்று இவ் உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours