பதினைந்து பேர் கொண்ட தாதியர் குழுவானது சுழற்சி முறையில் மருத்துவப் பணியினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து கொரோனாத் தொற்றென சந்தேகிக்கப்படுபவர்களுக்கு அர்ப்பணிப்பு மிக்க சேவையினை வழங்கி வருகின்ற தாதியர் குழு விடுதி ஒன்றில் தங்கியிருந்து தங்களது விடுதிகளுக்குச் செல்லாது தொடர்ச்சியான இரவு பகல் சேவையினை வழங்கி வருகின்ற இத் தாதியர் குழுவினை மட்டக்களப்பு மக்கள் பாராட்ட கடமைப் பட்டுள்ளனர்.
தொற்றுக் கிருமிகள் பரவாத வண்ணம் விஷேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆடையினை அணிந்து பணியினை ஆரம்பித்து ஏழு மணி முதல் இரண்டு மணி வரை நீர் ஆகாராங்கள் இன்றிய தங்களுடைய அர்ப்பணிப்பான பணியினை ஆற்றி வருகின்ற தாதியர் குழாமிற்கு மட்டக்களப்பு மக்கள் சார்பில் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.
தங்களுடைய உயிர்களைக் கூட துச்சமென மதித்து இத்தகைய உயர்ந்த மருத்துவ சேவையினை சகல மருத்துவப் பிரிவினர்களும் தானாகவே முன்வந்து நாட்டில் தற்போது ஏற்படுகின்ற அசாதாரான சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள அர்ப்பணிப்புடன் சேவையாற்ற முன்வர வேண்டும் என மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours