காரைதீவு நிருபர் சகா
கொரோனா நெருக்கடிக்குள்ளான மீனவர்கள் விவசாயிகள் பல்வேறு வேலைகள் செய்பவர்கள் வீட்டில் உணவு தட்டுப்பாட்டில் கூடுதலாக இருக்கின்றார்கள்.சில குடும்பங்கள் ஒரு சில குடும்பங்கள் பட்டினியில் வாடுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது . இருந்தபோதிலும் ஒரு சில அமைப்புகள் இளைஞர்கள் முன்வந்து பணி செய்கின்றார்கள் ஏனைய கூடுதலான அவர்கள் இந்த பணியை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். தேவையானவர்கள் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் காரைதீவு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
இக்காலத்தில் மிகவும் மோசமாக தொழிலுக்கு செல்ல முடியாமல் வைரஸ் பரவாமல் மக்களை பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தப்பட்டு இருக்கின்ற ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடித்து மக்கள் வெளியில் செல்லமுடியாமல் இருக்கின்றார்கள்.
வெளியில் செல்ல முடியாமல் இருப்பவர்கள் கூடுதலான அவர்கள் கூலித் தொழிலாளியாக இருக்கின்றார்கள். மீனவர்கள் விவசாயிகள் பல்வேறு வேலைகள் செய்பவர்கள் வீட்டில் உணவு தட்டுப்பாட்டில் கூடுதலாக இருக்கின்றார்கள்.சில குடும்பங்கள் ஒரு சில குடும்பங்கள் பட்டினியில் வாடுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது . இருந்தபோதிலும் ஒரு சில அமைப்புகள் இளைஞர்கள் முன்வந்து பணி செய்கின்றார்கள் ஏனைய கூடுதலான அவர்கள் இந்த பணியை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன் .
குறிப்பாக ஆலய நிர்வாகத்தினர் அதே போன்று சமூக அமைப்புகள் விளையாட்டு கழகங்கள் சனசமூக நிலையங்கள் ஏனைய அமைப்புகளும் கிராமத்து சங்கங்களும் இணைந்து இந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் .ஏனென்றால் இக்காலகட்டத்தில் தொழிலுக்குச் செல்ல முடியாமல் அன்றைய உழைத்து அன்றே சமைத்து சாப்பிடுகின்ற வறுமைக் கோட்டுக்குள் வாழ்கின்ற மக்கள் அரசு உதவி கிடைக்கும் வரைக்கும் பட்டினியால் வாடுவது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது .
அதன் அடிப்படையில் ஒரு சில அமைப்புகள் சேவை செய்கிறார்கள் இருந்த போதிலும் மக்களின் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு இன்று தள்ளப்பட்டு இருக்கிறது. ஆகையால் அன்புள்ளம் கொண்ட நெஞ்சங்கள் அனைவரும் இதில் கலந்து தங்களால் முடிந்த உதவிகளை இந்த மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் செய்ய வேண்டும் என்று இரு கரம் கூப்பி இந்த மனிதாபிமான சேவைக்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
உங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கித் தருவதற்கு உரிய குடும்பங்களுக்கு கொண்டு கொடுப்பதற்கும் வாகன வசதியும் எமது அனுமதியையும் பெற்று தருவதற்கு பல முயற்சிகளையும் எடுத்து தயாராக நிலையில் இருக்கிறேன் .
ஆகையால் எனது தொலைபேசி இலக்கத்திற்கு நீங்கள் அழைப்பை மேற்கொண்டு இந்த உதவியை செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 31 சைவர் சைவர் 852 இந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உங்களால் முடிந்த சேவைகளை செய்யுமாறு உங்களை அன்போடு வேண்டுகிறேன் நன்றி வணக்கம்

Post A Comment:
0 comments so far,add yours