காரைதீவு நிருபர் சகா
ஊடரங்குச்சட்டம் அமுலாகியிருந்தவேளையில் காரைதீவு இளைஞர்கள் சிலர் வீடுவீடாகசென்று கொரோனாத்தடுப்பு முகக்கவசத்தை இலவசமாக வழங்கிவைத்தனர்.
சம்மாந்துறைப்பொலிசார் காரைதீவு இராணுவம் சுகாதாரவைத்தியஅதிகாரிபணிமனையி னர் கிராமசேவை உத்தியோகத்தர் என்பன பூரண ஒத்துழைப்பை வழங்கினர்.
'காரைதீவு இளைஞர்கள் மற்றும் சமுகஆர்வலர்கள்'எனும் பெயரில் 'நம்மை நாமே பாதுகாப்போம்' என்றதுண்டுப்பிரசுரத்தையும் விநியோகித்தனர்.
ஒரு குறிப்பிட்ட வட்டாரங்களில் வீடுவீடாகச்சென்று முகக்கவசத்தை தொண்டர்கள் அணிவித்ததுடன் கொரோனாத்தடுப்புச் செயற்பாடுகளையும் அறிவுறுத்தினர்.
சுகாதார வைத்திய பணிமனை வாகனத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கிவாயிலாக வழங்கினர்.
குறிப்பாக வெளிநாடுகள் வெளிப்பிரதேசங்களிலிருந்து வருகைதந்தோர் பற்றிஅவ்வப்பகுதி கிராமசேவையாளர்க்கு அறியக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.



Post A Comment:
0 comments so far,add yours