ஏருர் தில்லை
எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டில ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸ் அச்சத்தினால் தொழிலுக்குச் செல்லமுடியாமல் இருக்கின்ற எருவில் கிராமத்தில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அவ் அமைப்பின் ஆலோசகர் ஓய்வுபெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ச.பேரின்பநாயகம் தலைமையில் 40 குடும்பங்களுககு இவ் உதவிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.
இப்பணியினை கலாபூசணம் அண்ணாவியார் வீர.இராசமாணிக்கம்,கோடைமேடு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர். க.விஜயசுந்தரம், மற்றும் அவ் அமையத்தின் உறுப்பினர்களும் இணைந்து வழங்கிவைத்தனர்.
இவ் சமூக நேயப் பணியினை இவ் அமையத்தின் ஸ்தாபகரும் தலைவரும் சமூகசேவகருமான எருவிலைச்சேர்ந்த அ.வசிகரனது நிதி அனுசரணையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







Post A Comment:
0 comments so far,add yours