குமணன்
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கருணா கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியில் உபதலைவராக செயற்பட்டுவந்த எஸ்.ஜெயானந்தமூர்த்தி என்பவர் கட்சியின் பொறுப்பு மற்றும் செயற்பாட்டிலிருந்து இன்று செவ்வாய்கிழமை(17.03.2020) நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் திரு விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்)அவர்களின் ஆலோசனைக்கு இயங்காது மற்றும் கட்சியின் யாப்பு,கொள்கைக்கு முரணாக தன்னிச்சையாக செயற்பட்டதன் காரணமாக தலைமை, மத்திய குழு தீர்மானத்திற்கு அமைவாக இன்று 17.03.2020 எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க கட்சியின் அனைத்துவித பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours