
சா.நடனசபேசன்
நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் களமிறங்கும் இராசமாணிக்கம் இரா. சாணக்கியன் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் முன்னிலையில் அவர் தனது வேட்பு மனுவில் கையொப்பமி்ட்டுள்ளார்.
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக பல்வேறு வாழ்வாதார நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் அந்த அமைப்பின் தவிசாளரான இரா.சாணக்கியன் வறுமை கோட்டின் கீ்ழ் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றார்.
அதேபோன்று இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டம்தோறும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
Post A Comment:
0 comments so far,add yours