மட்டக்களப்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கூலி வேலையாளர்க்கு இலவசமாக உணவுப்பொருள் பொதிகள் வழங்க  அரசாங்க அதிபர் நடவடிக்கை .

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க அரசாங்கத்தால்  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலை யாளர்களின் குடும் பங்களுக்கு இலவசமாக உணவுப்பொருள்களடங்கிய தலா ஆயிரம் ரூபா பெறுமதியான சுமார் 250  மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல்  ஊடாக  வழங்க மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர்நலன்புரி அமைப்பு முன்வந்துள்ளது.

சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான இந்த அன்பளிப்பு உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டசெயலகத்தில் வைத்து இன்று(3 0)  பொறுப்பேற்றுக்கொண்டார்.இந்த நிவாரண பொருட்களை வெல்லாவெளி ,கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு விநியோகிக்க அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உத்தரவினை பிறப்பித்துள்ளார்.இந்நிவாரணப்பொருட்கள் இப்பகுதி பிரதேச செயலாளர்களால் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர குறித்த முஸ்லீம் வர்த்தகர்நலன்புரி அமைப்பு கோட்டமுனை பகுதி மக்களுக்கு விநியோகிக்க 30 உணவுப்பொருட்களடங்கிய பொதிகள் கோட்டை முனை யூஸுபிய்யா முஸ்லீம் பள்ளிவாசல்  நிருவாக்கத்தினரிடம் ஒப்படைத்துள்ளது. இதேவேளை இந்நிருவாகம் மட்டக்கள ப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா விசேட சிகிச்சைநிலையத்தில் அர்ப்பணிப் புடன் கடமைபுரியும் வைத்திய பணியாளர் களின் சிற்றுண்டி உணவு செலவுக் குக்கென ரூபா 25 ஆயிரம் ரூபாவை மட்டக்களப்பு போதனா வைத்தியசா லை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கத்திடம் இன்று மதியம் கையளித்தனர் 

இந்த அன்பளிப்புப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர்நலன்புரி அமைப்பின் தலைவர்கே.எம்.எம்.கலீல்அங்கத்தவர்வர்த்தகர் எம்சீ.எம்.சியாட்  மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் நிருவாகிகளான எம்.எஸ்.எஸ்.பாயிஸ்.கணக்காளர் கே.எம்.சுகைர் பேஸ் இமாம் மௌலவி காபில் நியாஸ் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகி யிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours