காரைதீவு  நிருபர் சகா


இன்று-30- திங்கள் காலை  கிழக்கில் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டதும்
மக்கள் தமக்கானஉணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாகஈடுபட்டதைக்காணமுடிந்தது.

காரைதீவு பிரதேசசபை நான்கு இடங்களில் ஏற்பாடுசெய்த விசேட சந்தைகளில்மக்கள் முகக்கவசம் அணிந்து காலைமுதல் ஆர்வத்துடன் உணவுப்பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.

விபுலாநந்தா மைதானம் வைத்தியசாலை வளவு மாளிகைக்காடு பல்தேவைக்கட்டடம்மாவடிப்பள்ளி வயலோரவளவு என்பவற்றில் இத்தற்காலிக சந்தை 10அடி இடைவெளியில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளுர் மலையக மரக்கறிகள் தரமான பலவகை கடல்மற்றும் ஆற்று மீன்களும் விற்பனை செய்யப்பட்டன.

காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் அதனை நேரில் சென்றுகண்காணித்ததுடன் அவ்வப்போது தேவையான ஆலோசனைகளை படையினருக்கும்
உறுப்பினர்களுக்கும் வியாபாரிகளுக்கும் வழங்கினார்.மக்கள் அரசின்
சட்டதிட்டத்திற்கமைய படையினர் பொலிசாரின் கண்காணிப்பில்
பொருட்கொள்வனவிலீடுப்ட்டனர்.
நாளை-31-  முதல் தொடர்ச்சியாக காரைதீவுப்பிரதேசத்திலுள்ள 07
வட்டாரங்களிலும் மரக்கறி மீன் பேக்கரிப்பொருட்கள் நடமாடும் வாகனத்தில்மக்களின் காலடிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும்தவிசாளர் ஜெயசிறில் ஊடகங்களுக்கு அறிவித்தார்.லைசன்ஸ் இல்லாத வியாபாரிகள் விற்பனை செய்யமுடியாது.அவ்வாறு செய்தால்அவர்களது லைசன்ஸ் ரத்துச்செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours