நாட்டை காக்கும் இளைஞர் அணியின் பிரதி தலைவராக அக்கரைப்பற்றை சேர்ந்த அரசியல், சமூக, பொது நல செயற்பாட்டாளரான முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் நியமனம் வழங்கப்பட்டு உள்ளார்.

 நாட்டை காக்கும் இளைஞர் அணி தற்போதைய ராஜபக்ஸ அரசாங்கத்தின் நிழல் அமைச்சுகளில் ஒன்றாக அரசியல் அவதானிகளால் வர்ணிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தை தளமாக கொண்டு கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக அரசியல், சமூக, பொதுநல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிற நிசாம் நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கிழக்கு மாகாண தலைவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நிசாம் அனைத்து கட்சி அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர். நல்லிணக்க செயற்பாடுகளுக்காக இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பொதுவாக தேசிய ரீதியில் விசேடமாக மாவட்ட மட்டத்தில் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களாலும் மதிக்கப்பட்டு நேசிக்கப்படுபவர்.

அரசாங்க உயர் மட்டத்தில் இருக்க கூடிய செல்வாக்கு, அனைத்து கட்சி அரசியல்வாதிகளுடனும் இருக்க கூடிய நட்பு ஆகியவற்றை பயன்படுத்தி கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு காணப்படுகின்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours