த.தவக்குமார்

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் நாகன் சோலை நாகதம்பிரான் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் கொள்ளையிடப்பட்ட சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் nதியவருவதாவது

ஆலயத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த உண்டியலை இரவுவேளையில் இனம் தெரியதவர்கள் எடுத்துச் சென்று அருகில் உள்ள வயல் பிரதேசத்தில் வைத்து உடைத்து அதிலிருந்த பெருந்தொகை பணத்தினை எடுத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் பற்றி ஆலய நிருவாகத்தினர் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours