(க.விஜயரெத்தினம்)
தமிழ்மக்களுக்கு இன்று அபிவிருத்தி கதவு தானாக தட்டப்படுகின்றது.இதனை தமிழ்மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.எஸ்.அமல் தெரிவிப்பு.


தற்போதைய நிலையில் அபிவிருத்தி கதவு இன்று தமிழ்மக்களுக்கு தானாக தட்டப்படுகின்றது.இதனை தமிழ்மக்கள் சரியாக பயன்படுத்தி அங்கே உள்நுழைய வேண்டும்.தமிழ்தலைமைகள் கையை உயர்த்தி பெற்றுக்கொள்வதுபோல் தமிழ்மக்களும் பெற்றுக்கொள்ளனும்.கடந்த காலத்தில் ஆளுங்கட்சியினால் தமிழ்மக்களின் வாக்குகள் பணத்துக்காக சூறையாடப்பட்டது.பலர் தமிழ்மக்களின் வாக்குகளை ஆளுங்கட்சிக்கு  ஏஜெண்டுகளாக சேகரித்து கொடுத்தார்கள்.இதனால் தமிழ்மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்.நாங்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களை பெறுவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதன்மை வேட்பாளருமான எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.
வரலாற்றில் முதன்முறையாக தேசிய கட்சியில் மட்டக்களப்பில்  எட்டுத் தமிழர்கள் இலங்கை பொது மக்கள் முன்னணியில் (சிறிலங்கா பொதுஜன பெரமுன)கடந்த புதன்கிழமை(18)வேட்புமனு தாக்கல் செய்தது.இதன்போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...
எமது தமிழ்மக்கள் உரிமை,உரிமையென்று கடந்தகாலகளில் பாரியதொரு அவநிலைக்கு தள்ளப்பட்டார்கள்.எந்த உரிமையையும் பெற்றிடாத சமூகமாக தமிழ்சமூகம் இருக்கின்றது.அபிவிருத்தியும்,உரிமையும் தமிழ்மக்களுக்கு இன்று சிறப்பாக கிடைக்கப்பெற வேண்டும்.அதற்காகத்தான் நான் அரசாங்கத்துடன் இணைந்து என்னுடைய தமிழ்மக்களுக்காக அபிவிருத்தியை செய்து காட்டனும் என்று அர்ப்பணிப்புடன் உழைக்கின்றேன்.

ஆனால் அபிவிருத்தியையும்,உரிமையையும் இழக்கப்பட்ட சமூகமாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.இதற்கு காரணம் தமிழ்மக்களை கடந்த காலத்தில் சுயநலப்போக்குடனும்,தவறான வழி நடத்தல்களுடன் வழிகாட்டிய தமிழ் தலைமைகளாகும்.இனியும் இவ்வாறான தமிழ்தலைமைகளின் தவறான வழிகாட்டல்களிலிருந்தும்,சுயநலப்போக்குடைய வக்குரோத்து அரசியலிருந்தும் தமிழ்மக்கள் விலகிக்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் உரிமையையும்,அபிவிருத்தியையும் இழந்து தமிழ்மக்களின் இருப்பு,பாதுகாப்பு இழக்கப்படுவோம்.தமிழ்மகள் 72 வருடங்கள் நீங்கள் ஏமாந்தது போதும்.இனியும் ஏமாறக்கூடாது.
கடந்த காலத்தில் வெற்றுக்கோசத்தால் தமிழ்மக்கள் ஏமாற்றப்பட்டு,அவர்களின் வாக்குகளால் சூறையாடப்பட்டு, பிழைப்பு அரசியல் செய்து தமிழ்மக்கள் நொந்துபோய் ஒன்றையும் பெற்றுக்கொள்ளவில்லை.சரி உரிமைக்காக போராடி கிழக்குத் தமிழர்கள் சாதித்தது என்னென்று ஒன்றைப்பற்றி கூறுங்கள்.அந்தளவுக்கு தமிழ்மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்.கேவலம் பிழைப்பு அரசியல் செய்து தாங்களும்,தாங்கள் குடும்பமும் பொருளாதாரத்தில் முன்னேறியதைத் தவிர தமிழ்மக்கள் முன்னேற்றம் காணவில்லை.இதை தமிழ்தலைமைகள் இற்றை வரைக்கும் உணர்ந்துள்ளார்களா? இல்லை என்றுதான் கூறமுடியும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை காப்பாற்றனும் என்று தமிழ்தலைமைகள் 7தடவைகள் அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்தது.தலையாட்டி பொம்மைகளாக கேட்கின்றபோது இரண்டு கரங்களையும் உயர்த்திக்கொண்டு நானும் ஒருவனாக பாதுகாத்தேன்.பாதுகாத்ததுதான் மிச்சமாக எஞ்சியுள்ளது.
இன்று பார்த்தால் வேலையற்ற பட்டதாரிகள்,வேலையற்ற இளைஞர் யுவதிகள், 52000 பேர் மலசலகூடம் இல்லாதவர்கள்,50000பேர் வீடுகள் இல்லாதவர்கள்,எமது மாவட்டத்தில் 8000 மாற்றுத்திறனாளிகள்,36,000 மேற்பட்டவர்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்,அவர்களின் வாழ்வாதாரம்,வேலைவாய்ப்பு,அடிப்படைத் தேவைகள் பற்றி ஒரு துளியளவும் சிந்திக்க தெரியாத தமிழ்தலைமைகள்தான் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.இவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிப்பால் தோலுரித்து காட்டனும்.மட்டக்களப்பு வாழ் தமிழ்மக்கள் ,கிழக்கு மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து தமிழ்மக்கள் இழந்த அவிருத்தியையும்,உரிமையையும் ஜனாதிபதி, பிரதமரிடம் பெற்றுக்கொள்ளுவோம்.
இங்கு சாதகமாக கிடைத்தவர்கள்,தங்களுக்கு எல்லாம் கிடைத்தவர்கள்,எதைப்பற்றியும் கவலையில்லாதவர்கள் தமிழ்மக்களை குழப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.நாங்கள் அரசாங்கத்தின் நேரடியான அரசாங்க கட்சியாக போட்டியிடுகின்றோம்.அபிவிருத்தியையும்,உரிமையையும் தமிழ்மக்கள் சமாந்தரமாக பெற்றுக்கொள்வதற்குத்தான் நான் அரசாங்கத்துடன் கடந்தகாலத்தில்  இணைந்து அபிவிருத்தி சார்ந்த அரசியலை முன்னெடுத்தேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது எந்தக்கட்சியுடன் இணைந்து எந்ததொடர்பும் இல்லாமல் போட்டியிடுகின்றது.கிழக்கில் சில கட்சிக்காரர்கள் நாங்கள் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் போட்டியிடுவதாக போலிப்பிரசாரங்களை முன்னெடுக்கின்றது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைக்கும் சில தமிழ்கட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கிழக்கு மாகாணத்திலோ அல்லது மட்டக்களப்பு மாவட்டத்திலோ முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்திக்காக போராடி எந்த உரிமையையும் இதுவரைக்கும் இழக்கவில்லை.ஆயுத கலாச்சாரமில்லாத,படித்த,பண்பானவர்களையும்,புத்திஜீவிகளையும் ஒன்றிணைத்து மட்டக்களப்பிலே மொட்டுச்சின்னத்தில் 8 தனித் தமிழர்கள் போட்டியிடுகின்றார்கள்.இதனால் கிழக்குத் தமிழர்களின் பாதுகாப்பு, இருப்பு சிறப்பாக பேணப்படும்.
கடந்த காலத்தில் நாங்கள் ஆளுங்கட்சிக்கு போகமுடியாமல் காணப்பட்டது.தற்போதைய நிலையில் அபிவிருத்தி கதவு தமிழ்மக்களுக்கு தானாக தட்டப்படுகின்றது.இதனை தமிழ்மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.கடந்த காலத்தில் ஆளுங்கட்சியினால் தமிழ்மக்களின் வாக்குகள் பணத்துக்காக சூறையாடப்பட்டது.பலர் தமிழ்மக்களின் வாக்குகளை ஆளுங்கட்சிக்கு  ஏஜெண்டுகளாக சேகரித்து கொடுத்தார்கள்.இதனால் தமிழ்மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்.நாங்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களை பெறுவோம்.
கடந்த ஏப்பிரல் 21 திகதி நாட்டிலே இடம்பெற்ற தாக்குதல்கள் செய்தியை முன்கூட்டியே அறிந்தும் தடுக்க முடியாமற்போன கையாலாகாதவர்களை கொண்ட அரசாங்கம்,நல்லாட்சி அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்பட்ட சில தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தை விமர்ச்சிக்கின்றது.இவர்களால் தமிழ்மக்களின் உரிமையையும்,அபிவிருத்தியையும் தமிழ்மக்களின் காலடிக்கு கொண்டு வரமாட்டார்கள்.இவர்களை தமிழ்மக்கள் பாராளுமன்றம் அனுப்பியும் எந்த உரிமையையும்,அபிவிருத்தியையும் பெற்றுக்கொள்ள முடியாது.
கிழக்கு மாகாணத்தமிழர்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக 19மேற்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நாங்கள் ஈடுபட்டோம்.பொதுச்சின்னத்தில் போட்டியிடுமாறு கோரிக்கை முன்வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்.பொதுச்சின்னத்தில் உடன்பாடியில்லாமல் தத்தமது கட்சிகளை வளர்ப்பதற்காக கங்கணம் கட்டினார்களே தவிர தமிழ்தேசிய கூட்டமைப்பும்,ரி.எம்.வீ.பியும் பொதுச்சின்னத்திற்கு வரவில்லை எனத்தெரிவித்தார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours