இலங்கையில் மற்றுமொரு நபர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தேகொட பகுதியைச் சேர்ந்த நபருடன் தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours