பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைவரத்தை கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தைக் கூட்டி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தலை விட நாட்டு மக்களின் சுகாதாரப் பாதுகாப்பே முக்கியமானதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்தரமுல்லை, எதுல் கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார தலைமையத்தில் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் அரசியலமைப்பில் காணப்படுகின்றது எனவும் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours