சிறுபோக வேளான்மை பயிற்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் எவ்விதமான தடைகளும் இன்றி தங்களின் விவசாய பணிகளை தொடரலாம் என அரசாங்கம் பணிப்புரைவிடுத்ததை தொடந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு சிறுபோக விசாயிகள் எவ்விதமான அச்சங்களும் இன்றி தங்களின் விவசாய காணிகளுக்கு செல்வதற்கான அனுமதி வழங்கும்படியாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார.;

விவசாயிகள் உரியகாலத்தில் தங்களின் பணிகளை முன்னெடுக்காது தவறும் பட்சத்தில் பயிர்செய்கை காலம் பிற்போடப்படுமாயின் நீர் வழங்குவதி சிரமங்கள் ஏற்படவாய்ப்பாகு அதனால் உரிய காலத்தில் பயிரும்படியாக விவசாயிகளை அரசாங்க அதிபர் கேட்டுள்ளார்;

சகல விவசாயிகளுக்கான மானிய உரவிணியோகம் எவ்விதமான தடையும் இன்றி உரிய காலத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார் சிறுபோக விவசாயிகள் அச்சப்படத்தேவையில்லை என்றும் அவர்கள் வழமையான நடைமுறையினை பின்பற்p தங்கள் தொழிலில் ஈடுபடுமாறு வேண்டுகொள்விடுக்கப்படுகின்றது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours