(காரைதீவு நிருபர் சகா)
இற்றைக்கு ஆறுமாதங்களுக்கு முன்பு மின்னொழுக்கினால் அகாலமரணமடைந்த காரைதீவைச்சேர்ந்த பருவவயது மாணவி செல்வி நடேஸ்வரராஜா அக்ஷயா ஞாபகார்த்தமாக பஸ்தரிப்பு நிலையமொன்றை அமைக்கப்பட்டுள்ளது.
இது மக்கள்சேவைக்கான ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது என பலரும் தெரிவித்தனர்.
க.பொ.த.உயர்தரம் பயின்றுகொண்டிருந்த இளம்மாணவி அக்ஷயா அகாலமரணமடைந்த செய்தி அனைவரினதும்மனங்களை நெகிழச்செய்தது தெரிந்ததே.
அவர் ஞாபகார்த்தமாக கல்லறை அமைத்தஅதேவேளை அவர்நினைவாக பெற்றோர் காரைதீவு பிரதான வீதியில் குறிப்பாக விஸ்ணு ஆலயத்திற்குச்செல்லும் சந்தியினருகே நிருமாணித்தனர்.அதற்கு "அக்ஷயா நினைவகம் " எனப் பெயரிட்டுள்ளனர்.
அதனை மக்கள் பாவனைக்கு விடுமுகமாக மரணித்த அக்ஷயாவின்தந்தையார் நடேஸ்வரராஜன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி. ஜெயசிறிலிடம் இன்று (8)ஒப்படைத்தனர்.


Post A Comment:
0 comments so far,add yours