க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு போதனா வைத்தியாலையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரனா தொற்று உள்ளதாக இனங்காணப்பட்டவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியாலையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரனா தொற்று உள்ளதாக இனங்காணப்பட்டவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இலண்டனில் இருந்து மட்டக்களப்புக்கு வந்திருந்த ஒருவர் நோய் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் தொடர்பிலான கொரணா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு கொரணா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
61வயதுடைய குறித்த நபர் இன்று மாலை விசேட அம்பியுலன்ஸ் வண்டியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours