தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் தினத்தை நாளைய தினம் அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கான நோக்கத்தை நிறைவேற்ற அனைத்து இலங்கை மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனிடையே வெளிநாடுகளுக்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் தமது பயணச் சீட்டை ஊரடங்குச் சட்ட அனுமதியாக பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Post A Comment:
0 comments so far,add yours