ஆரச தனியார் போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டிருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு வேலைக்கு வருகின்ற ஊழியர்கள் மட்டும் வருகைதருவதற்காக அரச பேருந்து சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நேரங்களில் வினியோகிப்போருக்கு அனுமதியுடன் வழங்கப்பட்டு வருவதும் போதனா வைத்தியசாலையில் கிளினிக் தொடந்துவந்த நோயாளர்களுக்கு உரியா நோயாளிகள் தங்களின் கிளினிக் இலக்கத்தினை அறிவித்து தங்களின் மருந்துகனை அஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என வைத்திய சாலையின் பணிப்பாளல் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினரின் அற்பணிப்பான சேவையினை பாராட்டவேண்டும் இரவு பகல் பாராது தொடர்ச்சியக தாங்கள் கடமைகளுக்காக வீதிக்கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர் பொதுமக்கள் கிறிக்கட் விளையாடிவருகின்றதாகவும் வீதி ஓரங்களில் கதிரைகளை போட்டுக்கொன் அயல் வீட்டாருடன் அளவலாவுவதும் விருந்து போடுவது தேவைக்கு இல்லாது வெளியில் உலாவுவது தடைசெய்யப்படவேண்டும் என ஒரு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
உண்மையில் தற்போது உலக நாட்டை ஆட்டிப்படைக்கின்ற கொரோனாவை முற்றாக நமது நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு சகல மக்களும் ஒத்துளைப்பு வழங்கி பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஒவ்வரு தனி மனிதனும் ஆதரவு வழங்குவது மிகமிக அவசியமானது கொரோனாவின் கோரத்தினை குறைப்போம் கூடிவாழ்வோம்.
Post A Comment:
0 comments so far,add yours