(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிகாட்டலில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் ஊடாக மத்தியமுகாம் சமுர்த்தி வங்கி பிரிவில் முதற்கட்டமாக புதிதாக சமுர்த்தி நிவாரணம் பெறும் 542 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஆர்.வசந்தகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இவ்உலர் உணவுப் பொதிகள் சாளம்பைக்கேணி-01 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரிவிலும் இன்று வழங்கப்பட்டது. இதில் மத்தியமுகாம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஆர்.வசந்தகுமார், சாளம்பைக்கேணி-01 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.லத்தீப், மத்தியமுகாம் சமுர்த்தி வங்கி காசாளர் ஏ.ஜெ.முஜாஹித், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் ஏ.எம்.றபீக், சவளக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours