காரைதீவு நிருபர் சகா
சம்மாந்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காரைதீவில் குடும்பத்தகராறு காரணமாக நபர் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (07) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
சனசமூக வீதி காரைதீவு12 வசித்துவந்த 42வயது நிரம்பிய கிருஸ்ணபிள்ளை தட்சணாமூர்த்தி (கண்ணன்) என்பவரே இவ்வாறு தூக்கில்தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டடவராவார்.
இவர் 3 ஆண் பிள்ளைகள் 2 பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேதபரிசோதனைக்காக சடலம் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்பட்டது.



Post A Comment:
0 comments so far,add yours