(க.விஜயரெத்தினம்)
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதரண சூழல் காரணமாக நாளாந்த தொழிலை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும்,பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்,நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த 80குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு (07) துறைநீலாவணை கிராமத்தில் உள்ள பொதுநூலக வளாகத்தில் இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி சமூக வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பின் தலைவர் எஸ். ஜேசு சகாயம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ரி.வசந்தராஜா,செயலாளர் எஸ்.மதிசூதன், பொருளாளர் வ.சக்திவேல்,ஊடகவியலாளர்களான க.விஜயரெத்தினம்,ஏ.எல்.ஏ.எம்.சி னாஸ்,துறைநீலாவணை வடக்கு பிரிவுக்கான கிராமசேவை உத்தியோகத்தர் கே.சுரேஸ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.
அவுஸ்ரேலியாவில் தற்போது வசித்து வரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த உறவுகளின் நிதிபங்களிப்பில் 1200 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் COVID-19 இன் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி பொதுமக்கள் அறிவூட்டப்பட்டனர்.





Post A Comment:
0 comments so far,add yours