இ.சுதாகரன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட 35ம் கிராமம் கண்ணகிபுரம் கிராமத்தினைச் சேர்ந்த எஸ்.நாராயணன் 56 வயது நான்கு பிள்ளைகளின் தந்தை யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவது இன்று காலை தனது விவசாய நடவடிக்கையின் நிமிர்த்தம் தனது வயலுக்கு சென்ற வேளையில் எதிர் பாராத விதமாக காட்டுக்குள் நின்ற யானை குறித்த நபரை தாக்கியுள்ளது.யானை தாக்குவதனை அறிந்த அயலவர்கள் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில்' அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours