காரைதீவு  நிருபர் சகா

  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சென்றிருந்தபோது அங்கே நுழைவாயிலில் உள்வருவோர் செல்வோர் கை கழுவுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

அந்த இடத்தில் கை கழுவும் வேசனை உரஞ்சி கழுவிக்கொண்டிருந்தார் ஒருவர்.. அது வேறு யாருமில்லை. அந்த பணிமனையின் உயர் அதிகாரியான கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம்  சுகுணன் அவர்கள்.

அந்த காட்சியை  கமரா உடனே பதிவு செய்தது.. கடமைக்கு அப்போதே அவரும் வந்திருந்தார் எல்லோரும் கை கழுவுவது போன்று பணிப்பாளர் சுகுணன் அவர்களும் கை கழுவும் போது அந்த கை கழுவும் வேசனில் அழுக்கு இருந்ததால் தானே அதனை கழுவி சுத்தம் செய்த காட்சி உண்மையில் ஒரு முன் உதாரணமான விடயமாகும்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours