நேற்று (07-04-2020) காலை மட்டக்களப்பு நகரப்பகுதிகளிலும் தங்கள் பணிகளை முன்னெடுத்திருந்தமையும் அவதானிக்கமுடிந்தது இருதயபுரம் கிழக்கு பகுதியில் மக்கள் கூடுகின்ற பொது இடங்கலான பொதுச்சந்தை சமூர்த்தி வங்கி கட்டிடம் கிராம சேவையாளர் அலுவலகம் என பல இடங்களுக்கும் கிரிமி தொற்று மருந்துகள் விசிறப்பட்டு வந்தமை அவதானிக்கமுடிந்தது.
உள்ளுராட்சி நிறுவனங்கள் பொலிஸ் திணைக்களம் சுகாதார பிரிவினர்கள் மூலமாக கிரிமித்தொற்று மருந்துகள் விசிறப்பட்டு வந்தநிலையில் அவர்களின் வேலைப்பளு கூடியகாலமாதலால் வந்தாறுமூலை நலன்புரி அமைப்பினரின் உயரிய செயல்ப்பாட்டை பாராட்டியாக வேண்டும்.
மாவட்டத்தில் தற்போது இயங்கி வருகின்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காலத்தின் தேவைகருதி செயல்படுவது மிகமிக அவசியமாக கருதப்படுகின்றது தனியாக உணவை மாத்திரம் எல்லா நிறுவனங்களும் வழங்கினால் ஏனைவேலைகளை கவனிப்பதற்கு தனியாக அரசினால் முன்னெடுப்பதற்கு சற்று காலதாமதம் ஏற்படலாம் அதுவரை பார்த்திராமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்து செயல்படுவதனால் நமது மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் அல்லவா.
Post A Comment:
0 comments so far,add yours