மட் போதனாவைத்தியசாலையில் வைத்தியர்களின் தவறான சிகிச்சையால் இளைஞன் பரிதாபகரமாக உயிரிழப்பு

அக்கரைப்பற்றில் சோகச்சம்பவம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதலியார் வீதியைச் சேர்ந்த ஞானசிங்கம் மயூரன் (35) என்பவர் சுகயீனம்முற்ற நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுள்ளார் பின்னர்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(02) மரணமடைந்துள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

மரணமடைந்த  ஞா.மயூரன் என்பவர் கொழும்பு ரத்மலானையில் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையில் வெளிக்கள உத்தியோகத்தரா தொழில் புரிந்து வருகின்றார் அவர் கடந்த வாரத்தில்  விடுமுறையில் தனது வீட்டுக்கு வரும் போது சுகவீனமுற்றுள்ளார்.பின்னர் அவர்  அக்கரைப்பற்று வைத்தியசாலை மற்று தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.பின்னர் அவரை கொரோணா நோய்யின் சந்தேகத்தின் பேரில் அவரை பொதுசுகாதார பரிசோதகர் பொலிஸாரின் உதவியுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படு இவருக்கு கொரோணா தோற்று இல்லை என உறுத்தி செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அவருக்கு சிறுநீரகத்தில் சிறு பிரச்சனை இருப்பதாக கூறி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு விடுதி (04) சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த (02) வெள்ளிக்கிழமை இரவு (11.30) மணியளவில் இவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியவாலை வட்டாரங்கள் அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

பின்னர் இவரின் மரண விசாரணையினை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் அவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.இறந்தவரின் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்டவைத்திய அதிகாரிக்கு மரண விசாரணை அதிகாரி வேண்டுகோள் விடுத்த நிலையில் மரணமடைந்த ஞா.மயூரன் அவர்களின் மரணத்தில் கொரோணா தொற்று உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்த நிலையில் அவரின் உடற்பாகங்கள் பரிசோதனைக்கா கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தது.பின்னர் இவரின் உடற்பாகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபின்னர் அவரின் அறிக்கையில் இவருக்கு கொரோணா தோற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இவரின் பிரேரத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக பிரேர பரிசோதனை செய்ய 05.04.2020 (ஞாயிற்றுக்கிழமை) திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் சட்டவைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேர பரிசோதனையில் இவரின் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய வதற்காக இரத்த சுத்திகரிப்பு பிரிவில் வைத்தியர்கள் இவரை அனுமதித்து இவரின் வலது தோள்பட்டையினூடாக செலுத்தப்பட்ட ஊசி தவறுதலாக அவரின் இருதயப்பகுதியில் சென்று தாக்கப்பட்டதனால் இருதயப்பகுதியில் ஏற்பட்ட துவாரத்தினூடாக வெளியேறிய இரத்தம் அவரின் இருதயம் செயலிழத்தமையால் இவர் மரணமடைந்துள்ளதான இவரின் பிரேர பரிசோதனையில் வெளிவந்துள்ளது இது இவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்களின் தவறு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் பற்றிய விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours