துதி

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பு நகரின் மத்திய வீதியில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் இன்று காலை பாரிய தீவிபத்து ஏற்பட்டது.
குறித்த ஆடை விற்பனை நிலையத்தின் முதலாம் மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இது தொடர்பில் மட்டக்களப்பு தீயணைக்கும் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற மாநகர தீயணைக்கும் படையினர் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் உள்ள கலகம் அடக்குவதற்காக பயன்படுத்தப்படும் நீரடிக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனின் நேரடி கண்காணிப்பின் கீழ் மாநகரசபையின் தீயணைக்கும் படையினரின் அர்ப்பணிப்பான நடவடிக்கை காரணமாக தீப்பரவல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த தீவிபத்து காரணமாக இரண்டாம் மாடியில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள் உட்பட அங்கிருந்த பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

இந்த விபத்து மூன்றாம் மாடியில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours