(காரைதீவு சகா)
கல்விச்சேவையில் அதிகூடிய 41வருடகால சேவையைப்பூர்த்தி செய்த சம்மாந்துறை வலய கணிதபாட ஆசிரியஆலோசகர் எம்.எஸ்.எம்.சிறாஜூதீன் தனது 60வது வயதில் ஓய்வுபெற்றார்.
ஓய்வுபெறும் அவரைப்பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சஹதுல் நஜீத் தலைமையில் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
அவரது அர்ப்பணிப்பான சேவையைப்பாராட்டி பணிப்பாளர் நஜீம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
ஓய்வுபெறும் ஆசிரிய ஆலோசகர் சிறாஜூதீனின் கடந்தகால சேவைகள் பற்றி பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.அகமட் கியாஸ் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சபூர்தம்பி உதவிக்கல்விப் பணிப்பாளர்களான ஏ.அப்துல்;.நசீர் எம்.எம்.எம்.ஜௌபர் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.
சம்மாந்துறை முஸ்லிம் மத்தியகல்லூரியில் தரம்1 தொடக்கம் 13 வரை கல்விகற்ற அவர் மஜீட்புரம் சாளம்பைக்கேணி நிந்தவூர் ஆகிய கிராமங்களில் பணியாற்றி சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் தொடர்ச்சியாக 25வருடங்கள் சேவையாற்றியிருந்தார்.




Post A Comment:
0 comments so far,add yours