கண்டி மாவட்டத்தின் மினிப்பே பி
உலகளாவிய ரீதில் ஏற்பட்ட கொவிட் 19 நோய்த்தொற்றினையடுத்து நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட தொ டர் ஊரடங்கினால் கண்டி மாவட்டத் தின் மினிப்பே பிரதேச மக்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்து மி கவும் பாதிக்கப்பட்டனர்.
அம்கோர் நிறுவனத்தின் மட்டக் களப்பு அலுவலகத்தினால் 18/05/ 2020 அன்று மினிப்பே பிரதேச மக் களுக்காக சுமார் 1.6 மில்லியன் ரூபாய் செலவில் ஒவ்வொன்றும் 1,080 ரூபாய் பெறுமதியான 1536 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இப்பொதிகள் மட்டக்களப்பிலிருந் து கொண்டு செல்லப்பட்டு அம்கோர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணி ப்பாளர் திரு.ப.முரளிதரன் அவர் களால் மினிப்பே பிரதேச செயலாளர் திருமதி. வத்சலா மாரம்பகே அவர் களிடம் கையளிக்கப்பட்டது. இதன் போது அம்கோர் நிறுவனத்தின் சிரே ஸ்ட முகாமையாளர் திரு.சிவயோகரா ஜன், உதவி முகாமையாளர் திரு. பி றிஸ்லி றோய், திட்ட உத்தியோகத் தர் திரு.அ.செல்வக்குமார் மற்று ம் உதவி பிரதேச செயலாளர் திரு.கீ ர்த்தி திசாநாயக்க ஆகியோரும், பி ரதேச செயலக உத்தியோகத்தர்களும், பௌத்த மதகுருமார் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.
நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 நோ ய்த்தொற்றினையடுத்து ஏற்பட்ட அசா தாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு , திருகோணமலை, பொலநறுவை, கம்பகா மற்றும் கண்டி மாவட்டங்களில் இ வ்வாறான உலர் உணவு விநியோகம் அம் கோர் நிறுவனத்தினால் மேற்கொள் ளப்பட்டு வருகின்றமை குறிப்பி டத்தக்கது.






Post A Comment:
0 comments so far,add yours