(சா.நடனசபேசன்)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு பூராகவும் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்பட்ட நிலையில் திருக்கோவில் பிரதேசசெயலகப்பிரிவில் உள்ள விநாயகபுரம்; பிரதேச மக்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் நாட்டில் வாழும் நவரெத்தினம் செல்வரெத்தினம் காரைநகர் யாழ்பாணம் அவர்களது குடும்பம்தினரின் பங்களிப்பினால் 17 ஆம்திகதி சனிக்கிழமை பிரதேசசெயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.இவ் உதவியினை சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் கணக்காய்வாளர் நாகேந்திரன் உட்பட சுவிஸ் உதயம் அமைப்பினர் கலந்துகொண்டனர்.
இந்த உதவியினை வழங்கிய சுவிஸ் நாட்டில் வாழும் நவரெத்தினம் செல்வரெத்தினம் காரைநகர் யாழ்பாணம் அவர்களுக்கு சுவிஸ் உதயம் அமைப்பு பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துள்ளது





Post A Comment:
0 comments so far,add yours