( அஸ்ஹர் இப்றாஹிம்)

அண்மையக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு கடல் பரப்பில் அடிக்கடி ஏற்படும் கடல் கொந்தளிப்பால் ஏற்படும் பாரிய அலைகள் கரையை நோக்கி வருவதனால் தினசரி நிந்தவுர் பிரதேச கடற்கரை பிரதேசம் காவு கொள்ளப்படுவதனால் மீனவர்களும் சுற்றயல் பிரதேச  குடியிருப்பாளர்களும்  சொல்லொனா துயரங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடற்கரைப் பிரதேசத்திலுள்ள பயன்தரும் தென்னை மரங்கள் கடலரிப்பினால் தரையில்  வீழ்ந்து காணப்படுவதுடன் அவற்றின் வேர்களும் தரைக்கு மேலாக வெளி வந்தும் உள்ளது. இதனால் தென்னம் தோட்டங்களை பராமரித்து வருவோர் பெரும் நஸ்டத்தை எதிர்நோக்கி வருவதுடன்  மீனவர்கள் தாம் ஓய்வு எடுப்பதற்கும் , தமது தோணி , படகு , மீன்பிடி வலை என்பவற்றை திருத்துவதற்காக பயன்படுத்தும் இயற்கையான நிழலும்  இல்லாமல் போயுள்ளதாக மீனவர்கள்  கவலை தெரிவித்தனர்.
நிந்தவுர் கடற்கரை பிரதேச மீனவர்கள் தமது தோணி மற்றும் படகுகளையும் நிறுத்தி வைப்பதற்கு தற்போது போதிய இடவசதியும் , தமது மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்கான மீன்வாடிகளும்  இல்லாமலிருப்பது தமக்கு பெரும் கவலையளிப்பதாகவும் , இந்த நிலமை ஏற்படுவதற்கு ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகமும் ஒரு காரணமாகும் என பிரதேச மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதே வேளை நிந்தவுர் பிரதேச சபையினால் பொது மக்கள் ஓய்வை கழிப்பதற்காக கடற்கரையோர தென்னந்தோப்பு பிரதேசங்களில் கொங்கிறீட் கதிரைகள் போடப்பட்டு அழகுபடுத்தப்பட்டடிருப்பதுடன் ,  கடலரிப்பை தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறாக தொடர்ச்சியாக கடலலையினால் நிந்தவுர்  கடற்கரை பிரதேசம் காவு கொள்ளப்பட்டு போகுமேயானால் நிந்தவுரில் எதிர்காலத்தில் கடற்கரையொன்று முழுமையாக இல்லாமல் போனலும் ஆச்சரியப்படப் போவதில்லை.



 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours