இம்முறை பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அனைத்து அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்தார். அதன்படி, ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 11, 12, 13 ஆம் தர மாணவர்களுக்காக கடந்த 27 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவர்களுக்கு மாத்திரம் இந்த விடுமுறைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஏனைய தர மாணவர்களுக்காக பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours