துறைநீலாவணை நிருபர்

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியினை முன்னெடுப்பதே என்னுடைய சிந்தனையாக இருக்கின்றது இதனைச் செய்வதற்கான மக்கள் ஆணையினை எதிர்வரும் தேர்தலில் வழங்கும் போது எமது மக்களுக்கான அனைத்துச் சேவைகளையும் என்னால் முன்னெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்

துறைநீலாவணையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 01 ஆம் திகதி இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் பேசுகையில் நாம் எவ்வளவுதான் அபிவிருத்தி செய்தாலும் எங்களது மண் பாதுகாக்கப்படவேண்டும் அவ்வாறு பாதுகாக்கமுடியாமல் போனால் அபிவிருத்தி செய்ததில் எவ்வித பிரயோசனமும் இல்லை அது முழுமையான அபிவிருத்தியாகவும் அமையாது.
இன்று மட்டக்களப்பில் போட்டியிடுகின்ற கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர ஏனைய கட்சிகள் அரசாங்கத்தின் கைகூலிகளாகவே இருக்கக் கூடும் இவர்களால் எமது மக்களது உரிமையினைப் பெற்றுத்தர முடியாது. இவர்கள் போட்டியிடுவதன் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளைச் சிதைத்து வேற்று இனத்திற்குச் சாதகமானதை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் பணத்தினைப் பெறுவதற்காகவுமே.

தாங்கள் முஸ்லிம்களுடன் இணைந்து போட்டியிட்டால் தேர்தலில் கல்லெறி வாங்க நேரிடடும்என்ற காரணத்தினால் பல்வேறு சின்னங்களில் களமிறங்கியுள்ளனர்.

தமிழர்களின் நான்காவது பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்வதற்காக இந்த
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்வாக்குகளை சிதைப்பதற்கு பலரும் பல குழுக்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.இவர்களை எதிர்வரும் தேர்தலில் மக்கள் நிராகரிப்பார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இலட்சம் தமிழ் வாக்கு இருக்கின்றது இதில் 4 தமிழ் பிரதிநிதிகள் வரவேண்டும் ஆனால் வாக்கைப் பிரித்துவிட்டால் இஸ்லாமிய சகோதரர்கள் 2 பேர் வந்துவிடுவார்கள் இதனைச் செய்வதற்காகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்குகளைப் பிரிப்பதற்காகப் பலர் களத்தில் இறங்கியுள்ளனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours