(காரைதீவு  சகா)

வடக்கு கிழக்கை ஜனநாயக அரசியல் ரீதியில் எமது விடுதலைப்புலிகளே ஆளவேண்டும். அதற்கு முன்னோடியாக நாம் செயற்பட்டுவருகிறோம். அம்பாறையில் தமிழ்மக்கள் கருணா அம்மானையும் மட்டக்களப்பில் முன்னாள்அரசஅதிபர் உதயகுமாரையும் பூரணமாக ஆதரியுங்கள்.

இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா காரைதீவில் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகமாநாட்டில் தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

தேசியத்தலைவர் பிரபாகரன் 30வருடமாக முன்னெடுத்த உயிர்ப்பான தமிழீழப் போராட்டத்தில் களமுனையில் நின்றுபோராடியவர்கள் நாங்கள். அவரது வீரப்போராட்டத்தால் சர்வதேசரீதியில் தமிழ்மக்களது  பிரச்சினை முன்கொண்டுசெல்லப்பட்டது.ஆனால் 2009க்கு பிறகு அவர் உருவாக்கிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தியதோடு தமிழ்மக்களுக்கென எதனையும் உருப்படியாகச்செய்யாமல் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிவந்துள்ளது.

விடுதலைப்புலிகள் என்ற பெயரையே உச்சரிக்காமல் அவர்களை உள்வாங்காமல் த.தே.கூட்டமைப்பைப்பதிந்தால் தலைவரின்பெயரும் புலிகளின் பெயரும் வந்துவிடுமே என்றெண்ணி அதனைப்பதியாமல் தமிழரசுகட்கட்சியை வாழவைக்கவேண்டும் என்ற சுயநலசிந்தையே இன்று தமிழ்மக்கள் நடுத்தெருவில் நிற்கக்காரணமாகும்.

புலிநீக்கம் செய்த தமிழரசுக்கட்சி புலிப்பெயரோடு யார்வந்தாலும் சேர்க்கக்கூடாதென்றும் விடாப்பிடியாகசெயற்பட்டுவந்தது. எமது அண்மைய கோரிக்கைகூட இந்தஅடிப்படையில்தான் உதாசீனம் செய்யப்பட்டது.

தமிழீழப்பேராட்டத்தை ஆரம்பிக்காரணமும் அவர்களே. தந்தைசெல்வாவின் வட்டுக்கோட்டைத்தீர்மானமும் தொர்ந்த தமிழீழப்பிரகடமும் வீரஉணாச்சியூட்டும் பேச்சுக்களுமே தமிழீழப்போராட்டத்தை ஆரம்பித்துவைத்தன. இன்று போராட்டம்மௌனித்து பூச்சியநிலையில் நிற்பதற்குக்காரணமும் அவர்களே.

எனவேதான் புலிகளை ஓரங்கட்டி மக்களை ஏமாற்றிப்பிழைப்பு நடாத்திவரும் த.தே.கூட்டமைப்பினரை நாம் வெறுக்கிறோம்.நிராகரிக்கிறோம். மக்கள் இன்னமும் அவர்களின் தேசியத்திற்குபசப்பு வார்த்தைகளுக்கு மயங்கிவிடக்கூடாது.

வடக்கு கிழக்கை எமது தமிழ் விடுதலைப்புலிகள் அரசியல் ரீதியில் நிச்சயம் ஆளுவார்கள்.முதற்கட்டமாக வரும் மாகாணசபைத்தேர்தலில்நாம் குதிக்கிறோம்.தமிழ்மக்களின் உரிமகளைப் பெற்றுத்தரக்கூடிய ஒரேகட்சி எமது கட்சிதான்.

ஜனநயாகப்போராளிகள் கட்சி என்றும் ஒன்றுள்ளதே? என செய்தியாளர் கேட்டகேள்விக்கு பதிலளிக்கையில்:
உண்மையில் களத்தில் நின்ற போராளிகள் நாங்கள். இனி புலிகள் என்ற கதையே வரக்கூடாது என்பதற்காக ஜ.தே.கட்சித்தலைவர் ரணிலின் ஏற்பாட்டில் ஊடகர் வித்தியாதரனின் ஒழுங்கமைப்பில் சிலரைக்கொண்டு உருவாக்கப்பட்டதே ஜனநாயக போராளிகள் கட்சி. அவர்கள் த.தே.கூட்டமைப்பில் உள்ளிருந்து சுயநலத்திற்காக சுகபோகத்திற்காக செயற்படுகின்றனர்.

மட்டக்களப்பில் பிள்ளையான் செய்தவேலை அதிகம். சஹ்ரானின் குண்டுத்தாக்குதலோடு தொடர்புபட்டவர்.ஆரையம்பதியில் அவரது காணியை வழங்கி பயிற்சிக்கு ஒத்துழைத்தார். முதலாவது குண்டுசெயலிழக்கப்பட்டதும் அங்குதான். ஹிஸ்புல்லாவுக்கும் ஒத்துழைத்தார்.

எம்முடன் போராடிய 12ஆயிரம் போராளிகளின் வீரச்சாவின்மேலிருந்து பேசுகிறோம். 50ஆயிரம் போராளிகளை இழந்துள்ளோம். 3லட்சம் மக்களை இழந்துள்ளோம். ஆனால் இதையெல்லாம் மதிக்காமல் அரசியல் நடாத்துகிறார்கள் கூட்டமைப்பினர்.

உண்மையில் முதல் துரோகி மாவைதான். அவர்தான் எமது போராளிகள் சிலரை பிரித்து கூறாக்கியவர்.
வடக்கு கிழக்கல் யுத்தத்தை உருவாக்கிய த.தே.கூட்டமைப்பினர் பாராளுமன்றில் மக்கள்சேவை செய்யாமல் சுகபோகம் அனுபவிக்கின்றனர்.ஆனால் போராடியவர்கள் நடுத்தெருவில் அல்லல்படுகின்றனர். இதுதான் இன்றைய நிலைமை. எனவே தொடர்ச்சியாக தமிழ்மக்கள் ஏமாறாமல் இம்முறை செயல்வீரருக்கு வாக்களித்து எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றவேண்டும்.

அம்பாறை மாவட்டத்து தமிழ்மக்களுக்கு நல்லதொரு எதிர்காலம் தற்போது கருணா அம்மானின் வருகையோடு துளிர்விட்டுள்ளது. அதனை நனவாக்கி வாழ்வை வளப்படுத்திக்கொள்ளுங்கள். இன்றும் கிராமங்களையும் மக்களையும் "அத்திபட்டி"போன்று இழக்காமல் இருப்பைக்காப்பாற்ற கருணா அம்மானுக்குவாக்களியுங்கள் என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours